×

அலுங்கல், குலுங்கல் இல்லாத 2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ்

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மூன்றாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் இந்த கூபே ரக காரில் பிரேம் அமைப்பு இல்லாத கதவுகள், மேற்கூரை பின்புறமாக தாழ்ந்து செல்வதும் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. இது, 5 சீட்டர் மாடலாக கூறப்பட்டாலும், 4 பெரியவர்கள் அமர்ந்து செல்லக்கூடிய அளவில் இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த காரில் 5 ஸ்போக்ஸ் கொண்ட 18 அங்குல அலாய் வீல் சில்வர் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் கவர்ச்சியான விஷயமாகவே உள்ளது. இந்த காரின் ஏரோடைனமிக்ஸ் மிகச்சிறப்பானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உட்புறத்தில் மிக தரமான பாகங்களுடன் மிக சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் உயர்தர மர அலங்கார தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஜெட் இன்ஜின் வடிவிலான ஏசி வென்ட்டுகள் மெர்சிடிஸ் பென்ஸ் வாரிசு என்பதை நிரூபிக்கிறது. இந்த காரின் டேஷ்போர்டில் இரண்டு மின்னணு திரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் மற்றும் எஸ்-கிளாஸ் கார்களில் இருப்பது போன்ற இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தையும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டராகவும் இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலில் நப்பா லெதர் கவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. இந்த கார், மணிக்கு 250 கி.மீ வேகம் வரை செல்லும் வல்லமை வாய்ந்தது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டீசல் இன்ஜின் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. இந்த காரில் அடாப்டிவ் ஏர்சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாலை நிலைகளுக்கு தக்கவாறு, சஸ்பென்ஷன் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் என்பதால், அலுங்கல், குலுங்கல் இல்லாத பயண அனுபவத்தை பெற முடியும். ரூ.84.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் 12வது கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CLS ,Mercedes Benz , Mercedes Benz CLS
× RELATED மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ்