×

கல்லிடைக்குறிச்சி அருகே பயங்கரம் :விவசாயி மீதுள்ள கோபத்தில் பசு மாடு காலை துண்டித்த கொடூரம்

அம்பை: கல்லிடைக்குறிச்சி அருகே விவசாயி  மீதுள்ள கோபத்தில் பசு மாட்டின் காலை துண்டித்த கொடூரம் நடந்துள்ளது. இதையொட்டி 2 பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் தொண்டைமான் தெருவைச்சேர்ந்தவர் விவசாயி சங்கரபெருமாள்(66). இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவரது மாடுகள் மணிமுத்தாறு பள்ளிக்கூட தெருவைச்சேர்ந்த ராமையா(62) என்பவரது வயலில் மேய்ந்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.இதற்கிடையில் நேற்று சங்கரபெருமாள் மணிமுத்தாறு பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது உறவினர்கள் 2 பேருடன் அங்கு வந்த ராமையா இவரது மாடுகளை விரட்டியடித்துள்ளார். இதைபார்த்த சங்கரபெருமாள், ஏன் இப்படி மாட்டை விரட்டுகிறீர்கள் என தட்டிக்கேட்டார். அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர்கள், பசுமாடுகளை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் 3 மாடுகள் காயமடைந்ததோடு ஒரு மாட்டின் கால் துண்டிக்கப்பட்டது. அதைபார்க்க கொடூரமாக இருந்தது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ ஆதம் அலி விசாரணை நடத்தி ராமையா மற்றும் அவரது உறவினர் மணிகண்டன்(24) ஆகிய இருவரை கைது செய்தார். மேலும் சிங்கம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி(48) என்பவரை தேடி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallidiyur Kuchi , Cow cow, foot cut, angry at the farmer
× RELATED கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்