×

அமெரிக்காவில் அதிக அளவில் அடைக்கலம் கேட்டு இந்தியர்கள் விண்ணப்பம்

வாஷிங்டன்: இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. 2014 முதல் தற்போது வரை 20 ஆயிரம் இந்தியர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு ஆண்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, வடக்கு அமெரிக்க பஞ்சாபி சங்கத்திற்கு விளக்கம் அளித்துள்ளது. அடைக்கலம் கேட்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். அதிலும் 2014 -ல் 2,306 ஆண்களும், 146 பெண்கள், 2015-ல் 2,971 ஆண்களும் 96 பெண்கள், 2016- ல் 4,088 ஆண்களும், 123 பெண்கள் ஆகியோர் இதில் அடங்குவர். மேலும்  2017- ல் 3,656 ஆண்களும், 187 பெண்களும் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு ஜூலை வரை 296 பெண்கள் உட்பட 7,214 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலான பஞ்சாபியர்கள் உட்பட இந்தியர்கள் வெளிநாட்டில் தங்க குடியேற விரும்புகின்றனர். இதற்காக அவர் டிராவல் ஏஜென்ட்களிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் கொடுக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indians ,United States , Indians, refuge, United States
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...