×

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார். உடல் நலக்குறைவால் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்  இன்று காலமானார். அவருக்கு வயது 94. இவர் அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார். இந்நிலையில் வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்  நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு கடுமையான உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சைபெற்ற அவர் ஓரளவுக்கு குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : George Herbert Walker Bush ,US , Former US President, George Herbert Walker Bush, died
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!