×

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிலநடுக்கம் ... மக்கள் பீதி

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வடக்கு அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரம் அலஸ்கா. இந்நிலையில் இம்மாநிலத்தின் கொடியாக் நகரில் தெற்கு பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்ட அந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவுக்குப் பின் 12.31 மணிக்கு நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ்.ஜியாலஜிகல் சர்வே கூறியுள்ளது. உயிர் மற்றும் உடைமைகளுக்கு அளவுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம், என்று ஆன்கரேஜில் உள்ள அதிகாரிகள் கற்கரையோரத்தில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புகழ்பெற்ற இந்த நகரில் அடுத்தடுத்து நடைபெற்ற நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக சேதமாகின. சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தில் கண்ணாடிகள் கிழித்தும் வீட்டில் இருந்த பொருட்கள் விழுந்தும் பலர் காயமடைந்தனர். உயிரிழப்பு பற்றி தகவல் இதுவரை வரவில்லை. மேலும் பல சாலைகள் மற்றும் பாலங்கள் மூடப்பட்டுவிட்டன. சாலைகளில் செல்ல வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று போலீஸ் துறை தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,United States ,Alaska , United States, Alaska, Earthquake
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்