×

டிடிஎஸ் தாக்கல் செய்ய ஜனவரி வரை அவகாசம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி விதிகளின்படி டிடிஎஸ் தாக்கல் செய்ய ஜனவரி 1ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) விதிகளின்படி, பொருட்கள் மற்றும் சேவைக்கு 2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தும்போது ஒரு சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். இதுபோல் மாநில அரசு சட்டப்படி ஒரு சதவீதம் பிடிக்கப்படும். நடப்பு நிதியாண்டில் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மேற்கண்ட டிடிஎஸ் விவரங்களை தாக்கல் செய்வதற்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி இணையதளத்தில் டிடிஎஸ் தாக்கல் மற்றும் அதற்கான சான்றிதழை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DTS , GTP
× RELATED நிறுவன ஊழியர்கள் பான், ஆதார்...