×

பாலைவனச்சோலை பட இயக்குனர் ராபர்ட் மரணம்

சென்னை: ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராபர்ட் ஆசீர்வாதம் (68), மாரடைப்பு காரணமாக நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். இவர், தனது நண்பர் ராஜசேகரனுடன் இணைந்து ஒருதலை ராகம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று, அங்கு புரொபசராகவும் பணியாற்றினார். தூரம் அதிகமில்லை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பு, பாலைவனச்சோலை, பறவைகள் பலவிதம், கல்யாண காலம் உள்பட பல தமிழ் படங்களை, ராபர்ட்-ராஜசேகரன் என்ற பெயரில்  ஒளிப்பதிவு செய்து இயக்கினார்கள். கடைசியாக மாயாபஜார் 1995 படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். இவர்களில் ராஜசேகரன், சினிமா மற்றும் டி.வி நடிகராக இருக்கிறார்.

சினிமா படங்கள் தவிர, சில டி.வி தொடர்களையும் இயக்கியுள்ள ராபர்ட் ஆசீர்வாதம், நுரையீரல் தொடர்பான நோய் காரணமாக, சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்க துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். திரையுலகை சேர்ந்த பலர் ராபர்ட் ஆசீர்வாதத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அடக்கம் இன்று சென்னையில் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Robert Ellen , Director Robert died of the movie 'Oruvanavancholai'
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை