×

கோரிக்கைகளை வலியுறுத்தி தமமுக உண்ணாவிரத போராட்டம் : ஜான்பாண்டியன் பங்கேற்பு

சென்னை: தேவேந்திரர்களை பட்டியல் சாதியில் இருந்து நீக்கி, வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை வகித்தார்.
மாநில பொது செயலாளர் பிரிசிலா பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் சென்னை மண்டல செயலாளர் ராஜேந்திர பிரசாத், வக்கீல் சுதாகர், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வன்னியரசு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளர், வாதிரியான் என பல பெயர்களில் அழைக்கப்படும் சாதிகள் அனைத்துமே தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்ததாகும். எனவே இந்த சாதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்.

பட்டியல் பிரிவில் உள்ள 7 ஜாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவோம் என பாஜ தாமரை சங்கமம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இக்கோரிக்கையை பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன் என பாஜ தேசிய தலைவர் அமித்ஷா மதுரையில் நடந்த தேவேந்திர சமூக மாநாட்டில் தெரிவித்தார். ஆனாலும் நடவடிக்கை இல்லை. வேளாண் தொழில்புரியும் தேவேந்திரகுல வேளாளர் இன மக்கள் தாழ்த்தப்பட்டோர் அல்ல. தேவேந்திரன் வம்சத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்களை பட்டியல் சாதியில் இருந்து நீக்கி, வேளாண் மரபினர் என்ற தனிப்பிரிவில், மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் நீண்ட நாள் கோரிக்கையான தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் நெல்லையில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hunger strike ,Janpandian , Democracy hunger strike, demand,Janpandian participation
× RELATED நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு