×

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய ஆயுத மசோதா தாக்கல் சீக்கியர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள அனுமதி

லண்டன் : சீக்கியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக கிர்பான் என்ற குறுவாலை வைத்துக் கொள்ளவும், மதச் சடங்குகளில் நீண்ட வாள் பயன்படுத்துவதையும் அனுமதிக்க இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புதிய ஆயுத மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வெடிபொருட்களின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால், வன்முறையில் ஈடுபடுபவர்கள் கத்தியால் குத்துதல், ஆசிட் வீசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனால பிளேடு வகை ஆயுதங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் புதிய ஆயுத சட்டத்தை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டால், அது ஏராளமான சீக்கியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால், இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு, இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகத்தை அணுகி, கிர்பன் மற்றும் மதச்சடங்குளில் நீண்ட வாள் பயன்படுத்துவதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய ஆயுத சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி தயாரிக்கப்பட்ட ஆயுத மசோதா -2018, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் வாசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘திருத்தப்பட்ட மசோதாவின் மூலம் கிர்பான் வைத்துக் கொள்ளவும், மதச் சடங்குகளில் நீண்ட வாளை பயன்படுத்தவும், இந்த ஆயுங்களை சப்ளை செய்யவும், விற்கவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடரும்’’ என்றார்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sikhs ,parliament ,UK ,Korban , Sikhs,new arms bill , UK parliament , Korban
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...