×

காளையார்கோவில் பகுதியில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்

காளையார்கோவில்: காளையார்கோலில் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் போதியமழை இல்லாமல் நீர்த்தேக்கங்கள், குளங்கள், கண்மாய்கள்  முற்றிலும் வறண்டு கிடக்கிறது. இதனால் கிணறுகள், ஆழ்துளை போர் வெல்களை நம்பி இருந்தனர். தற்போது அவைகளும் வற்றிவிட்டது. நகர் மற்றும் கிராமங்களின் பல்வேறு பகுதியில் நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட போர்கள் போடப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளின் போர் வெல்கள் குறைந்த ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பாதி தெட்டி நிறைவதே சவலாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தண்ணீர் பிரச்னைக்கு உள்ளாட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

2016ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பரமக்குடி ரோட்டில் டெலிபோன் ஆபீஸ் எதிர்புரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் திட்டமே சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் விரிவாக்கம் ஆகியுள்ள காளையார்கோவில் பகுதியில் 20,000க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பழுதடைந்த  நிலையில் தண்ணீரைத் தேடி பொதுமக்கள் அலைகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  சொர்ணவள்ளி நகரை சேர்ந்த முத்து கூறுகையில், ‘‘தண்ணீருக்காக இரவு பகலாக சுற்றித்திரிகிறோம். சொட்டு சொட்டாக வரும் தண்ணீர் ஒரு குடம் கிடைப்பதே கஸ்டமாக உள்ளது. தனியார் குடிதண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்கள் ராட்சத போர்வெல் அமைத்து, கூடுதல் விலைக்கு தண்ணீரை விற்று வருகின்றனர். எனவே மக்களின் நலன்கருதி ஊராட்சி நிர்வாகம் ராட்சத போர்வல்கள் அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வழிவகுக்க வேண்டும்’’என்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Kalaiyorko , In Kalariyorko, water shortage, civic suffering
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...