×

உசிலம்பட்டி நவீன எரிவாயு தகனமேடை விரைவில் திறக்கப்படும் : கலெக்டர் உறுதி

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சுடுகாட்டில் நவீன எரிவாயு தகனமேடை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பணி நிறைவடையும் தருவாயில், தகனமேடைக்கு மின் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கலெக்டர் நடராஜன் உசிலம்பட்டி-பேரையூர் சாலையிலுள்ள நகராட்சி சுடுகாட்டிற்கு சென்று நவீன எரிவாயு தகனமேடையை பார்வையிட்டார். விரைவில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தகனமேடை திறக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
பின், சுடுகாட்டு பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டுப்பட்டு வரும் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டார்.

இதில் உசிலம்பட்டி ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மாடசாமி, நகராட்சி ஆணையாளர் சுப்பையா, பொறியாளர் அழகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் அகமதுகபீர், பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் கணேசன் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நடராஜன் நேற்று ஆய்வு செய்தார். நகராட்சி உரக்கிடங்கில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நுண்ணுயிரி முறையில் குப்பை அகற்றும் பணி, தெற்கு தெருவிலுள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் ரூ.84 லட்சத்தில் நுண் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணி, ரூ.2 கோடி மதிப்பீட்டில் நகராட்சிக்கு கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘திருமங்கலம் நகரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும். நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆய்வின் போது, தாசில்தார் நாகரத்தினம், கமிஷனர் ஜெயராமராஜா, சுகாதார அலுவலர் சீனிவாசன், ஓவர்சியர் பட்டுராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Collector ,Usilampatti Modern Gas Fireplace , Modern gas burning platform, opening soon
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...