×

அதிராம்பட்டினம் பகுதியில் கஜா புயலால் கயிறு தொழிற்சாலைகள் கடும் சேதம் : ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் பகுதியில் அதிநவீன கயிறு தொழிற்சாலைகள் கஜா புயலால் கடும் சேதம் அடைந்து இயந்திரங்களில் தண்ணீர் புகுந்தது. தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் ேவலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் ராஜாமடம், சுந்தரநாயகிபுரம், தம்பிக்கோட்டை, மழவேனிற்காடு, துவரங்குறிச்சி, பள்ளிக்கொண்டான் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் உள்ள்ன. இத்தொழிற்சாலை வெளிநாட்டு இயந்திரங்களை பயன்படுத்தி பலவகையான கைறுகள் செய்கின்றனர். அதோடு தேங்காய் மட்டையிலிருந்து நாறுகளும் எடுக்கப்படுகிறது. இங்கு தயார் செய்யும் கயிறுகள் பஞ்சுகள், வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியே உள்ளனர்.

கஜா புயலால் கயிறு தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. ராஜமடம் பகுதியில் அதிநவீன இயந்திரங்கள் முழுவதும் தண்ணீர் புகுந்து பழுதடைந்துள்ளது. 50 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் பழுதடைந்தன. புதிதாகத்தான் இயந்திரங்களை மாற்றி தொழிற்சலையை நடத்த முடியும். மேலும் கயிறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலளர்களுக்கு வேறு வேலை தெரியாததால் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. கயிறு தொழிற்சாலைகள் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு உடன் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலைகளூக்கு வங்கி மூலம் கடன் உதவி செய்ய வேண்டும். வங்கியில் கடன் உதவி பெற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் கட்டுவதற்கு காலகெடுவு நீடித்து கொடுக்க வேண்டும் என்று கயிறு தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm factories ,Ghazi ,Adirampattinam ,area , Adirampattinam, kaja storm, Factories
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...