×

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு பெரிய சரக்கு கப்பல் வருகை

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு முதல் முறையாக பெரிய சரக்கு கப்பல் வந்தது. தூத்துக்குடி  வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வருவதற்காக பணிகள்  மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் கடந்த மாதம் 77 ஆயிரம் மெட்ரிக் டன்  சரக்குடன் ஒரு கப்பல் வந்தது. இந்நிலையில் அந்த கப்பலை விட பெரிய கப்பலான  ஜியோர் ஜியோ அவினோ என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் தூத்துக்குடி  வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 229.2 மீட்டர் நீளமும்,  38 மீட்டர் அகலமும், 14 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இந்த கப்பல் ஐக்கிய  அரபு நாட்டில் உள்ள மினா சாகர் துறைமுகத்தில் இருந்து 82 ஆயிரத்து 170 டன்  சுண்ணாம்பு கல் ஏற்றிக் கொண்டு வந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி கூறுகையில், ‘‘82  ஆயிரத்து 170 டன் சரக்குடன் வந்த இந்த கப்பலை கையாளுவதற்கு உறுதுணையாக  இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம். தற்போது துறைமுக கப்பல் தளங்களில்  மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புக்கான தூர்வாறும் பணி மற்றும் மேற்கொள்ளபட  இருக்கும் பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்கள் துறைமுகத்தின் சரக்கு  கையாளும் சவாலை எதிர் கொண்டு, மேலும் நிலக்கிரி, சுண்ணாம்பு கல், ராக்  பாஸ்பேட் ஆகிய சரக்குகளை அதிக அளவில் கையாளுவதற்கு உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : harbor ,Thoothukudi VCC , Thoothukudi, harbor, cargo ship
× RELATED தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு;...