×

நீடாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகியது

நீடாமங்கலம்: நீடாமங்கலம்,கூத்தாநல்லூர் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பின்தங்கிய சம்பா மற்றும் தாளடி நடவு மழை நீரில் மூழ்கி அழுகியது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்,கூத்தாநல்லுர் பகுதிகளில் பெய்துவரும் மழையால் புள்ளவராயன் குடிகாடு, மேலபூவனூர், காளாச்சேரி, சித்தமல்லி,வெள்ளங்குழி, பூவனூர்,பரப்பனாமேடு, கடம்பூர்,பெரம்பூர்,ரிஷியூர்,காரிச்சாங்குடி,மேலாளவந்தசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், அனைத்து பயிர்களும் மூழ்கி தண்ணீர் வடியாமல் அழுகி வருகிறது.

மேலும், கூத்தாநல்லுர் தாலுக்கா பகுதிகளில் அதங்குடி, சித்தாம்பூர்,மூலங்குடி, பூதமங்கலம், பூந்தாளங்குடி,வபாதிமங்கலம், சித்திரையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பின்தங்கிய சம்பா மற்றும் தாளடி  நட்ட இளம் நடவில் தற்போது பெய்து வரும் மழை நீர் புகுந்து அனைத்து பயிர்களும் மூழ்கி தண்ணீர் வடியாமல் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land ,area ,Kidanallur ,Chamba , Needamangalam, kuttanallur, crops
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!