×

மணலியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்: மணலி மண்டலம் கொசப்பூரில் குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மணலி மண்டலம் 17 வார்டுக்குட்பட்ட கொசப்பூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், இப்பகுதி மக்களுக்கு, குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக இப்பகுதியில் குழாய்களில் குடிநீர் வரவில்லை. லாரிகளிலும் குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். அதிக பணம் கொடுத்து கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டது.

இப்பிரச்சனை குறித்து குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், காலி குடங்களுடன் கொசப்பூர் சாலையில் நேற்று காலை திடீரென ஒன்று திரண்டு அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீசார் மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,road ,Manila , Sandalwood, drinking water, women, road stroke
× RELATED ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்