×

புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தார்பாய் கேட்டு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி: கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தார்பாய் கேட்டு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெரியகொத்தமங்கலம் கிராமத்தில் கஜா புயலால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகளின் மேற்கூரையை தற்காலிமாக சரி செய்யும் வகையில் தார்பாய் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


ஆனால் இதுவரை தார்பாய் வழங்கப்படவில்லை, இதனை கண்டித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனல் அரசன் தலைமையில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே கஜா புயல் ஆய்வு கூட்டத்திற்காக வட்டாட்சியர் அலுவகம் வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ உடனடி தார்பாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,Public Workers' Struggle ,Tirathiripondi Vatattiriyar ,houses , Storm, house, tarpaulai, tirutapoondi, vattattiyar office, civilians, sita
× RELATED வேற மாறி ஆபீஸ் 2வது பாகம் உருவாகிறது