×

அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுவதாக டிசிஎஸ் மீது கூறப்பட்ட புகார் : கலிபோர்னியா நீதிமன்றம் நிராகரிப்பு

கலிபோர்னியா: அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுவதாக டிசிஎஸ் மீது கூறப்பட்ட புகாரை கலிபோர்னியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், உலகெங்கிலும் பல்வேறு கிளைகள் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் டிசிஎஸ் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. அங்கு உள்ள டிசிஎஸ் அலுவலங்களில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் அமெரிக்கர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊரியர் தொடர்ந்த வழக்கில், அமெரிக்காவில் டிசிஎஸ் அலுவலகங்களில் இன ரீதியான பாகுபாடு பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். சம்பளம், சம்பள உயர்வு, போனஸ் தொகை என அனைத்திலும் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.

மேலும் பணிநீக்கம் போன்ற நிறுவன ரீதியான நடவடிக்கைக்கு அமெரிக்கர்கள் அதிகமாக ஆளாவதாகவும், அமெரிக்க டிசிஎஸ் அலுவலகங்களில் 20% பேர் மட்டுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.  நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 12 சதவீதம் பேர். ஆனால் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 1 சதவீதம் மட்டுமே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தனர். இவ்வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், டிசிஎஸ் நிறுவனம் இன ரீதியாகவும், அமெரிக்கர்களிடம் பாகுபாட்டுடனும் நடந்து கொள்வதாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தை மட்டும் கணக்கில் கொண்டு அமெரிக்காவை முன்னாள் ஊழியர்கள் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த ரீதியில் வழக்கை இந்த வழக்கை அணுக முடியாது. எனவே அவர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Americans ,DCS ,California Court , tata consultancy service, California Court, Rejection
× RELATED அமெரிக்காவில் இந்தியர் கடைகளை குறி வைத்து நகைகள் கொள்ளை