×

குன்னூர்-பர்லியார் மலைப்பாதையில் யானைகள் முகாம்

குன்னூர்: குன்னூர் அருகே பர்லியார் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக சாலை ஓரங்களில் புற்கள் மற்றும் மூங்கில்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால் சமவெளி பகுதிகளிலிருந்து காட்டுயானைகள்  அவ்வப்போது குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகிறது. இதனால் வாகனஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க  வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நேற்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில்  பர்லியார் அருகே சாலையின் ஒரத்தில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வந்தது. அவ்வழியாக வந்த வாகனஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை  நிறுத்தி புகைப்படம் எடுக்க முயன்றதால்  சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரமாக காட்டுயானைகள் நகராத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஊட்டி வரும் சுற்றுலாபயணிகள் மற்றும்  வாகனஓட்டிகள் சாலையோரம் நிற்கும் காட்டுயானைகளை புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளர். மேலும் மலைப்பாதையில்  காட்டுயானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephant camp ,hills ,Kunar ,Burliar , Coonoor, mountain, elephants
× RELATED தகிக்கும் மலைகளின் அரசி:...