×

மிக தந்திரமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் அடையாளத்தை மாற்றும் பாக்., : ராணுவ தளபதி பேட்டி

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமூக ஊடகங்கள் மூலமாக தேசவிரோத கருத்துக்கள் பரவி வருவதாக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத அடிப்படையிலும், போராட்ட அடிப்படையிலும் ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் எதிராக கருத்துக்கள் முடுக்கிவிடப்படுவதாக கூறினார். இதனால் தான் காஷ்மீரில் அமைதிக்கான முயற்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக குறிப்பிட்டார். காஷ்மீர் மக்களின் சகிப்பு தன்மை வெகுவாக குறைந்து கொண்டே வருவதாக கூறினார். இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பான மனநிலை காணப்படுவதாக கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னையை விட , முதலில் காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

காஷ்மீரில் நடக்கும் கல்வீச்சு சம்பவங்களுக்கு அந்நாட்டில் இருந்து வந்து காஷ்மீரில் குடியேறி உள்ள ஆக்கிரமிப்பாளர்களே காரணம் என்றார் பிபின் ராவத். பாகிஸ்தான் மிக தந்திரமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் அடையாளத்தை மாற்றி வருகிறது. இதனால் உண்மையான காஷ்மீர் மக்கள் யார், பஞ்சாபி மக்கள் யார், யார் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெளிவாக அறிய முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

இதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரச்னையிலும், அதுனை நமது கட்டுக்குள் கொண்டு வருவதிலும் கவனம் செலுத்துவதை விட, நமது வசம் உள்ள காஷ்மீர் மக்களின் அடையாளத்தை காப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் தீவிரவாத பயிற்சி முகாம்களை அந்நாட்டு அரசு துறைகள் தான் நடத்தி வருவதென்பது உலகறிந்த உண்மை. காஷ்மீருக்குள் ஊடுருவிய மக்களாலேயே கல்வீச்சு சம்பவங்கள், பள்ளிகள் மூடப்படுவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக உரிய பதிலடி கொடுக்கும் திறன் நம்மிடம் உண்டு. ஒருவேளை அத்தகைய நடவடிக்கையில் இறங்கினால் தான் அந்நாடு அமைதியாக இருக்-கும் எனில் அதற்கும் தயாராக உள்ளோம் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pak ,military commander ,Kashmiri , Army Chief General Bipin Rawat, Kashmir, Pakistan
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை