×

கஜா புயல் பாதிப்பு... மத்திய அமைச்சர் இன்று தமிழகத்தில் ஆய்வு

சென்னை: கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார். இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கஜா புயலால் பாதித்த நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு வர இன்னும் சில மாதங்கள் பிடிக்கும். அப்பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 1000 கோடியை ஒதுக்கினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பாதிப்பு பகுதிகளை முதல்வர்
 மற்றும் துணை முதல்வர் பார்வையிட்டார்.

அதனையடுத்து டெல்லி சென்ற முதல்வர் மோடியை சந்தித்து புயலின் பாதிப்பு குறித்து விளக்கி ரூ. 15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இதனை அடுத்து மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு செய்தது. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புயல் பாதிப்பு பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Union Minister ,Tamil Nadu , Gajah Storm ,Damage, Union Minister , Tamil Nadu
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...