×

நெஸ்ட்லே அல்லது யூனிலீவருக்கு விரைவில் கைமாறுகிறது ஹார்லிக்ஸ்

புதுடெல்லி: ஹார்லிக்ஸ் நிறுவனம் விரைவில் கைமாற உள்ளது. நெஸ்ட்லே அல்லது யூனிலீவர் நிறுவனம் இதை வாங்கும் என தெரிகிறது. கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனம் ஹார்லிக் நிறுவனத்தை விற்க முடிவு செய்ததாக கடந்த மார்ச் மாதமே தகவல் வெளியானது. பிரபல மருந்து நிறுவனமான நாவர்டீஸ் பங்குகளை வாங்க விற்பனை செய்வதாக கூறப்பட்டது. இந்த நிறுவனத்தை நெஸ்ட்லே வாங்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து, விரைவில் நிறுவனம் கைமாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் பிஸ்கெட் மற்றும் மதர் ஹார்லிக்ஸ் ஆகியவை அடங்கும்.

இந்திய சந்தையில் ஹார்லிக்ஸ் 72.5 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. சுமார் 300 கோடி டாலருக்கு (சுமார் 21,000 கோடி) கைமாற உள்ளது. இதை வாங்க நெஸ்ட்லே நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டது. இதுபோல், இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் யூனிலீவர் நிறுவனமும் ஆர்வம் காட்டுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான தகவல்கள் ெநஸ்ட்லேதான் வாங்குகிறது என தெரிவிக்கின்றன. 1843ம் ஆண்டில் வில்லியம் மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பானம் உலகம் முழுக்க பிரபலம். 2ம் உலகப்போரின்போது மிட்டாய் மற்றும் மாத்திரைகளாக இது போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Harley ,Nestlé ,Unilever , Horlicks quick return , Nestlé,Unilever
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...