×

டிஜி லாக்கர் திறங்க கவலையை விடுங்க

வங்கி லாக்கர் தெரியும்... அதென்ன டிஜி லாக்கர்? மத்திய அரசின் டிஜிட்டல் முயற்சிகளில் ஒன்றுதான் டிஜி லாக்கர். டிஜிட்டல் வடிவில் இதில் ஆவணங்களை சேமித்து வைக்கலாம். இந்த லாக்கர் கணக்கை திறக்க ஆதார் இருந்தாலே போதும். கம்ப்யூட்டர் மூலம் https://digilocker.gov.in/ இணையதளத்தில் அணுகலாம். இதற்கு மொபைல் ஆப்ஸ் உள்ளது. மொபைலில் அதை நிறுவிக் கொள்ளலாம். இப்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், ஆதார் ஆவணங்கள் என எல்லாமே டிஜிட்டல் வடிவில் டிஜி லாக்கர் மூலம் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. வாகன சோதனையின் போது இவற்றை காண்பிக்கலாம். ஆனால் அவை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ததாக இருக்கக்கூடாது. டிஜி லாக்கரில் வாகன பதிவு எண் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால் டிஜிட்டலாக பதிவிறக்கம் ஆகிவிடும். இதுவே ஏற்கப்படும். வாக்காளர் அட்டை, பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், பான் கார்டு போன்றவற்றையும் இதில் சேமித்து வைக்கலாம். ஸ்கேன் செய்து கூட சில ஆவணங்

இதற்கு மட்டுமல்ல, மியூச்சுவல் பண்ட் உட்பட சில நிறுவனங்களில் கேஒய்சி நடைமுறையை பூர்த்தி செய்யக்கூட இதை பயன்படுத்தலாம். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மியூச்சுவல் பண்ட் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாய ஆவணமாக சமர்ப்பிக்க கோர முடியாது. இதற்கு மாற்றாக, விரைவான ஆவண சரிபார்ப்புக்கு அவை நம்பியுள்ளது டிஜிலாக்கர். அதுமட்டுமல்ல, எலக்ட்ரானிக் வடிவிலான ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சுய சான்றளிப்பு செய்து சமர்ப்பிக்கவும் இது உதவும். இதில் சேமித்து வைத்த, ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்த ஆவணங்களை மொபைல் ஆப்ஸ் அல்லது இணையதளம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம். ஆதார் அடிப்படையில் செயல்படும் இந்த டிஜி லாக்கரை ஒரு முறை பாஸ்வேர்டு பயன்படுத்தி திறக்கலாம் என்பதால் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவாதம். சமீபத்திய புள்ளி விவரப்படி இதில் சுமார் 336 ஆவணங்கள் மிக பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்களும் ஆவணத்தை டிஜிட்டலாக சேமித்து வைக்க தயாராகி விட்டீர்கள்தானே.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Digi , Digi locker, open the worry
× RELATED டிஜி லாக்கர், எம் பரிவஹன் மொபைல்...