×

பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் ‘பி’ அணிதான் டிஆர்எஸ் : ராகுல் குற்றச்சாட்டு

கோஸ்கி : தெலங்கானாவில் வரும் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அங்கு ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாஜ,வும் தனித்து போட்டியிடுகின்றன. அங்குள்ள கோஸ்கி பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: டிஆர்எஸ் என்பது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்பதல்ல. தெலங்கானா ராஷ்டிரிய சங்பரிவார் என்பதாகும். இது பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் ‘பி’ அணியாகும்.
 
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஐதராபாத் எம்பி.யான ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் மறைமுகமாக தொடர்பு வைத்துள்ளார். அந்த இரு கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜ தோற்கடிக்கப்படக் கூடாது என உறுதியேற்று பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தேசியளவில் பாஜ.வை காங்கிரஸ் தோற்கடித்து விடக் கூடாது என அந்த இரு கட்சியினரும் சபதம் ஏற்றுள்ளனர். மக்கள் அதை புரிந்து கொண்டு எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு ராகுல் பேசினார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,RSS ,Rahul ,TRS , Bhaj, RSS's 'B' team, TRS,Rahul's allegation
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?