×

ஸ்டெர்லைட் ஆலை மூடிய விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய பரிந்துரை அரசுக்கு ஏற்பட்ட அவமானம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை  தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு  ஏற்பட்டிருக்கும் அவமானம் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளோடு செயல்பட அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரைத்திருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம்.

இப்படி நடக்கும் என்பதால்தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு காட்டிய மெத்தனம்தான் காரணம்.இனியாவது, தமிழக அரசு முறையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Green Sarkar ,plant ,Sterlite ,MK Stalin , Sterlite plant, Green Tribunal, government, MK Stalin
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...