×

சீன விஞ்ஞானி சாதனை மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரட்டைக் குழந்தை பிறந்தது : எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தி கொண்டது

பீஜிங்:   சீனாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானி ஹீ ஜியாங்குய். அமெரிக்காவின் ரைஸ் அன்ட் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். இவர் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றம் ெசய்யப்பட்ட குழந்தைகளை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரட்டை குழந்தைகளை உருவாக்கியுள்ளேன். இதற்காக எச்ஐவி பாதித்த கணவனும், எச்ஐவி பாதிக்காத மனைவியும் அடங்கிய 9 ஜோடியை தேர்வு செய்தேன். அவர்கள் எனது பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டு, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்தேன்.

சில மரபணுக்களை செயல்படாமல் முடக்கினேன். இவர்களில் ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரட்டைக் பெண் குழந்தைகள் பிறந்தது.
இதுதான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உலகின் முதல் இரட்டை குழந்தைகள். லுலு, நானா என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தைகள், கிரேஸ் - மார்க் தம்பதிக்கு பிறந்துள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையின் மரபணுவில் மாற்றங்கள் செய்ததின் மூலம், சாதாரண குழந்தைகளை விட பல மடங்கு திறமையான, எச்ஐவி தாக்குதலால் பாதிக்காத குழந்தைகளை உருவாக்கி உள்ளேன். இந்த குழந்தைகளுக்கு அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.  இந்த மரபணு மாற்றக்குழந்தைகள் பற்றிய தகவல் எதிர்பாராத விதமாக தற்போது வெளியானதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இப்போது எழுந்துள்ள எதிர்ப்பின் காரணமாக, எனது இந்த சோதனை முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மரபணு மாற்றப்பட்ட குழந்தைகளை ஜியாங்குய் உருவாக்கி இருப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம், ஜியாங்குயின் ஆய்வு கூடத்தில் சோதனை நடத்தி, அவருடைய ஆராய்ச்சி பற்றி விசாரணை நடத்த சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinese , A Chinese scientist record ,genetically modified, twin child,AIDS resistant
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருபோதும்...