×

சீக்கியர்கள் மீதான வன்முறை 80 பேரின் தண்டனையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்: 4 வாரத்தில் சரணடைய உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கில், 80 பேரின் தண்டனை செல்லும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவரது இரு பாதுகாவலர்களால் கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து சீக்கியர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். டெல்லியில் இந்த சம்பவத்தில் 95 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் ேததி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 107 பேரில் 88 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை நீதிபதி ஆர்.கே.காவ்பா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது 8 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து 80 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில், ‘‘88 பேரின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே, தண்டனை பெற்ற அனைவரும் 4 வாரத்தில் சரண் அடைய வேண்டும்” என நீதிபதி காவ்பா உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi High Court ,Sikhs , Delhi HC
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...