×

சார்க் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்காது : பாக்.,-கின் அழைப்பு நிராகரிப்பு

டெல்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்காது என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். தீவிரவாதமும், பேச்சு வார்த்தையும் எப்போதும் ஒன்றாக செல்ல முடியாது என அவர் கூறியுள்ளார். தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றார். சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தானுக்கு அழைப்போம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்த நிலையில், பாகிஸ்தானின் அழைப்பை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் கொண்ட தெற்காசிய நாடுகள் பிராந்திய கூட்டமைப்பு சார்க் என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை மாநாடு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2014ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக 18 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனால் கடந்த 2016ல் பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்த சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது. இஸ்லாமாபாத்தில் நேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறும் போது, பிரதமர் இம்ரான்கான் தேர்தல் வெற்றி விழாவில் பேசியபோது, இந்தியா, பாகிஸ்தான் உறவில் இந்தியா ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தால், நாங்கள் 2 அடி எடுத்து வைப்போம் என்றார். எனவே அடுத்த ஆண்டு சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

இதனிடையே சார்க் அமைப்பின் உறுப்பினர் நாடான வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மற்நொரு உறுப்பு நாடான இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் சார்க் மாநாட்டில் பங்கேற்க அழைப்பை ஏற்க கோரும் பாகிஸ்தான் அழைப்பை இந்தியா ஏற்க விரும்பவில்லை என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன. இந்நிலையில் தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என அறிவித்துள்ள இந்தியா, சார்க் மாநாட்டி்ல பங்கேற்க வருமாறு கூறிய பாகிஸ்தானின் அழைப்பையும் நிராகரித்துள்ளது. கடைசியாக 2014-ல் ஆண்டில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சார்க் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,summit ,SAARC ,Pak , Pakistan, India, SAARC Summit, Call of Rejection
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...