×

சீனாவில் டிராகன்ஃபிளை எனும் சர்ச் எஞ்சினை கொண்டுவரும் புதிய திட்டத்துக்கு கூகுள் ஊழியர்கள் எதிர்ப்பு

கலிபோர்னியா: சீனா நாட்டில் டிராகன் ஃபிளை (Dragonfly) எனும் சர்ச் எஞ்சினை கொண்டுவரும் புதிய திட்டத்துக்கு கூகுள் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனா நாட்டில் மற்ற நாடுகளில் உள்ளது போல இணையதளம் சுதந்திரமானது கிடையாது. அங்கு இணையத்தை பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அங்கு கூகுள் இணையதளம், பேஸ்புக் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சீனாவிற்கு என்று தனி சர்ச் எஞ்சின், தனி சமூக வலைத்தளங்கள் உள்ளது.  

இந்நிலையில் சீனாவில் அரசு விதித்து இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கூகுள் நிறுவனம் டிராகன்ஃபிளை என்ற புதிய சர்ச் எஞ்சினை உருவாக்கியுள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் நேரடி யோசனை மூலம் இந்த டிராகன்ஃபிளை சர்ச் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள்தொகை அதிகம் இருப்பதால் கூகுள் பயனர்களை ஈர்க்க இந்த டிராகன்ஃபிளை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிராகன்ஃபிளை சர்ச் எஞ்சினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுளில் வேலை பார்க்கும் முக்கியமான 30 ஊழியர்கள் வெளிப்படையாகவே தங்கள் பெயர்களை குறிப்பிட்டு மனு அளித்துள்ளனர். சீனா நாட்டிற்கு கூகுள் அளித்து இருக்கும் சலுகைகளை பிற நாடுகளும் கேட்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் இதேபோல மற்ற நாடுகளும் கேட்டால் இணைய சமநிலை பாதிப்படையும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் கட்டுப்பாடுகளுக்கு கூகுள் பணிய கூடாது எனவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிடுமாறு அந்த மனுவில் கூகுள் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Google ,China , Google,employees,protest,introduce,new plan,Dragonfly,search engine,China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...