×

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் அரசு நிவாரணங்களை வழங்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை: கஜா புயல் தாக்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் புயல் தாக்கிய சேதங்களை கணக்கிடும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் கிராமத்தில் 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள அப்பகுதி மக்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் அந்த கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பலா ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக நாசமடைந்துள்ளன. சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தக்கூட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புயல் தாக்கி 13 நாட்கள் ஆகியும் இதுவரை அதிகாரிகள் நிவாரணத்திற்கான கணக்கீடு பணிகளை தொடங்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர் பொதுமக்கள். சாய்ந்து போய்கிடக்கும் மரங்களை கண்டு கண்ணீர் விட்டு வேதனையுடன் அவர்களது கோரிக்கையை தெரிவிக்கின்றனர் அந்த பகுதி மக்கள். இது வரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்காததால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். விவசாயத்தை தவிர வேறு எந்த பணியும் தெரியாமல் விவசாயத்தையே நம்பி இருந்த எங்களுக்கு இது மிக பெரிய இழப்பீடு என்று கூறுகின்றனர் விவசாயிகள். இதையடுத்து அரசு உடனடியாக சேதங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.      


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kothamangalam ,village ,Pudukkottai district , Pudukottai, Gajah storm, relief supplies
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...