×

‘யூபிஎஸ்’ மற்றும் ‘ஜெனரேட்டர்’ பயன்படுத்தும் போது மெயின் பாக்சை ‘ஆப்’ செய்ய வேண்டும்

சென்னை: ‘வீட்டில் ‘யூபிஎஸ்’ மற்றும் ‘ஜெனரேட்டர்’ மூலமாக மின்சாரம் எடுத்து பயன்படுத்தும் போது, ‘மெயின் பாக்சை ‘ஆப்’ செய்திருக்க வேண்டும்’ என, தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்நுகர்வோர் தங்கள் வீட்டில் பொருத்தியுள்ள ‘யூபிஎஸ்’, மின்வாரிய எர்த்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு உள்ளநிலையில், ‘யூபிஎஸ்’ஐ பயன்படுத்தி வீட்டில் மின்சாரம் உபயோகித்தால், எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து கொண்டிருக்கும்.

இதுதெரியாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக, கம்பத்தில் ஏறி ஊழியர்கள் பணி செய்யும் போது, அவர்கள் விபத்தில் சிக்கி இறக்க நேரிடுகிறது. இதனால் மின்சாரம் இல்லாத போது ‘யூபிஎஸ்’ அல்லது ‘ஜெனரேட்டர்’ முறையில் மின்சாரத்தை உபயோகிக்கும் நிலையில், மெயின் பாக்ைஸ கண்டிப்பாக ‘ஆப்’ செய்யவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UBS , UPS, Generator, main,
× RELATED உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூபிஎஸ் வெடித்து தீ விபத்து