×

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 28 ஆவணங்கள் கேட்ட குற்றவாளி தரப்பு மனு அதிரடி தள்ளுபடி: வழக்கு டிச.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்டர்மேன் உள்ளிட்ட பலர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அயனாவரம் மகளிர் காவல்நிலையம் சார்பில் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் கடந்த வாரம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். வழக்கு குறித்த ஆவணங்களும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு 17 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 17 பேர் தரப்பில் வக்கீல்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதில், 10வது குற்றவாளியான பாபு என்பவர் தரப்பில் ஆஜரான வக்கீல், எங்களிடம் உள்ள ஆவணங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, 28 ஆவணங்களை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிபதி, 5 ஆவணங்கள் மட்டுமே கொடுக்க முடியும். மற்ற 23 ஆவணங்களை வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : case of molestation girl,ayanavaram
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...