×

அதிமுக செய்தி தொடர்பாளர் நியமனம்

சென்னை: முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் அதிமுக செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக செய்தி தொடர்பாளராக ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தூத்துக்குடி மாவட்டம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,spokesperson , AIADMK, spokesperson
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...