×

நிஜாமாபாத்தில் மின் பற்றாக்குறையா? ஓட்டுக்காக பொய் சொல்ல வேண்டாம்: சந்திரசேகர ராவ் ஆவேசம்

மெகபூப்: ‘‘ஓட்டுக்காக பொய் சொல்ல வேண்டாம்’’ என பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தி உள்ளார். தெலங்கானாவில் நேற்று முதல்முறையாக பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘நிஜாமாபாத்தில் குடிநீர், சாலை, மின்சார வசதிகள் கூட இல்லை’ என குற்றம்சாட்டினார். இந்த மக்களவை தொகுதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்பி.யாக உள்ளார். ெமகபூப் நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:

நிஜாமாபாத் தொகுதியில் மின்பற்றாக் குறை, குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி இல்லை என்று பிரதமர் மோடி எப்படி பொய் சொல்லலாம்? ஓட்டுக்காக இப்படி  பொய் சொல்வது உங்கள் பதவிக்கு அழகல்ல. தெலங்கானாவில் மின்பற்றாக் குறை இல்லை. எனவே, பொய் சொல்லாதீர்கள். நான் யாருக்கும் பயப்படுபவன் அல்ல. நான் ஒன்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அல்ல. நாட்டிலேயே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் தெலங்கானா தான்.

பாஜ ஆளும் எந்த மாநிலத்திலாவது விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குப்படுகிறதா? மேலும், முதியோர், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பலன் பெறும் நலத் திட்டங்கள் தெலங்கானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மீண்டும் வெற்றி பெறுவதை யாரும் தடுக்க முடியாது. தெலங்கானாவில் மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nizamabad ,Chandrasekara Rao , Chandrasekara Rao
× RELATED தாய் அருகே விளையாடிக்...