×

பாகிஸ்தான் அறிவிப்பு சார்க் மாநாட்டுக்கு மோடிக்கு அழைப்பு

இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தானுக்கு அழைப்போம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் கொண்ட தெற்காசிய நாடுகள் பிராந்திய கூட்டமைப்பு சார்க் என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை மாநாடு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2014ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த 2016ல் பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்த சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை.

வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் நாடுகளும் பங்கேற்க மறுத்ததால் மாநாடு நடைபெறவில்லை. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் நேற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது: பிரதமர் இம்ரான்கான் தேர்தல் வெற்றி விழாவில் பேசியபோது, இந்தியா, பாகிஸ்தான் உறவில் இந்தியா ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தால், நாங்கள் 2 அடி எடுத்து வைப்போம் என்றார். எனவே அடுத்த ஆண்டு சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PM ,summit ,Modi ,SAARC , Pakistan, SAARC Convention, Modi
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!