×

ராணிப்பேட்டை அக்ராவரம் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நீர் தேக்க தொட்டி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் ஊராட்சி அக்ராவரம் மலைமேடு ஜெஜெ. நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டி உள்ளது. தற்போது அந்த மேல்நீர் தேக்க தொட்டி ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியில் தெரிந்தவாறு காணப்படுகிறது. இடிந்து விழும் ஆபத்தாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஆபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மேல்நீர் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranipettai ,entrance , Queenpattu, Agraharam, Storage Tank
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...