×

புயல் தாக்கி 12 நாட்களாகியும் மீளாத புஷ்பவனம்... படகுகள் சேற்றில் சிக்கியதால் வாழ்வாதாரம் பாதிப்பு

புஷ்பவனம்: நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமம் புயல் தாக்கி 12 நாட்கள் ஆகியும் இன்னும் மீள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. உணவு, குடிநீர், போன்ற அடைப்படை வசதிகள் இல்லாமல் கிராம மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கஜா புயல் பாதிப்பானது 12 மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கத்தால் கடற்கரை பகுதிகளில் மீனவர்களின் படகுகளை காற்று மற்றும் மழை நீரானது தூக்கி எறிந்திருக்கிறது. அதே போல குடியிருப்பு பகுதிகளின் மீதும் மரங்கள் விழுந்திருக்கின்றன. மேலும் பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த விவசாயமே சீர்குலைந்து காணப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் மீனவ கிராமங்கள் அதிகமாக இருக்க கூடிய பகுதியான கோடியங்கரை, புஷ்பவனம், போன்ற பகுதிகளில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக புஷ்பவனம் பகுதியில் கிராமம் முழுவதும் கடலுக்குள் உள்ளே உள்ள சகதியானது புயலின் போது அடித்து வரப்பட்டதால் குடியிருப்புகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் முழுவதுமாக மூழ்கி காணப்படுகின்றன. அதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் புஷ்பவனம் பகுதியானது சகதியின் காரணமாக பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Pushpavanam , Storm, pushpanavana, boat, livelihood damage
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...