×

இன்சூரன்ஸ் பணம் பெற லாரிக்கு உரிமையாளரே தீவைப்பு: உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளருக்கு லஞ்சம்

தருமபுரி: தருமபுரி சேலம் நெடுசாலையில் தோப்பூர் அருகே கடந்த மாதம் 21ம் தேதி தேங்காய் என்னை ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. லாரி தீப்பிடித்தது தொடர்பாக சந்தேகம் எழுந்ததால், அது குறித்து விசாரிக்கும் போது உரிமையாளர் பிரபு என்பவரே இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது லாரிக்கு தீ வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பொய்யான வழக்கு பதிவிற்காக தோப்பூர் ஆய்க்காளர் ஆனந்த்வேலு என்பவர், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளார். இது குறித்து லாரி உரிமையாளர் கொடுத்துள்ள வாக்குமூலம் கொண்ட வீடியோ வாட்ஸ்ஆப்பில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் யாரெல்லாம் தனக்கு உடைந்தையாக இருந்தனர் என்ற விவரங்களையும், இன்சூரன்ஸ் பணத்தை எவ்வாறு செலவிட்டார் என்ற விவரங்களும் பதிவாகியுள்ளது. மேலும் ஆய்வாளர் ஆனந்த் வேலு லஞ்சம் வாங்குவதற்காக பேரம் பேசிய ஆடியோ வெளியானதால் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குட்கா லாரியை மடக்கி பிடித்து, பின்னர் லஞ்சம் பெற்று கொண்டு விடுவித்தார் என்ற புகாரும் இவர் மீது உள்ளது. ஆனால் ஆனந்த வேலு மீது துறை ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : owner ,firefight ,police inspector , Larry, arson, owner, researcher, bribery
× RELATED புகையிலை பொருட்கள் கடத்தல்