×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் முகேஷ் அம்பானி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு திருமலைக்கு வந்தார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து முகேஷ் அம்பானி ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இதனையடுத்து இன்று காலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் முகேஷ் அம்பனி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

மேலும் தனது மகனின் திருமண அழைப்பிதழை ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பித்து சாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mukesh Ambani ,darshan ,Tirupati Ezhumalayyan , Tirupathi, Tirupathi Ezhumalayyan Temple, Swami Darshanam and Mukesh Ambani
× RELATED திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம்