×

தேவசம் போர்டுகளின் கமிஷனர் இந்துவாக இருக்க வேண்டும் : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம் போர்டுகளின் கமிஷனர் இந்துவாக தான் இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் சுமார் 3,000 கோவில்கள் உள்ளன. இதனை ஐந்து தேவசம் போர்டுகள் நிர்வகித்து வருகின்றனர். கேரளாவில் குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சி, கூடல் மாணிக்கம் என ஐந்து தேவசம் போர்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருவிதாங்கூர் - கொச்சி இந்து மத நிலையங்கள் சட்டம் 1950ல் சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயன் ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்.

அதன்படி இந்த திருவிதாங்கூர் போர்டுகளின் கமிஷனராக இந்து அல்லாதவரையும் நியமிக்க முடியும் என திருத்தம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் பா.ஜ., மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராமசந்திர மேனன், தேவன் ராமசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு தேவசம் போர்டு கமிஷனரும் இந்துமதத்தை பின்பற்றுபவராக மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Devas Board , Kerala, Devasam Board, Commissioner, Hindu, Kerala High Court
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...