×

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: புயல் பாதித்த பகுதி மாணவர்கள் கோரிக்கை

தஞ்சை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புயலால் பாதித்த பகுதி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க  நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களால் இயலவில்லை என்பதால் விண்ணப்பத்திற்கு கால அவகாசம் தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயம் என்ற நிலையில் , நீட் தேர்வுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு முழுவதும் 12ம் வகுப்பு  மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வரும் நிலையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மட்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கஜா புயலால், பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் சீரடையாததால், இணையதள சேவையை பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து, சில தன்னார்வ அமைப்புகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இலவசமாக ஏற்படுத்தி தந்துள்ளனர். மேலும் தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் நீட் தேர்வுக்கு கட்டணமின்றி விண்ணப்பிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த தகவல் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,NEAT ,area , Neet Selection,Time Period,Application
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...