×

தேவை தேனிலவு!

தேனிலவு என்பது பணக்காரர்கள் மட்டுமே செல்லக்கூடியது என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நமது நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம்தான். இதில் பெண்ணும் பையனும் பேசிப் பழகிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. திருமணம் முடிந்த பின்னும் சில நாட்கள் உறவினர்கள் கூடவே இருப்பதால், அவர்களுக்கு பிரைவஸி இருக்காது. எனவே, மணமக்கள் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த இடம் தேனிலவு. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும்.
 
தேனிலவு என்றால் ஏதோ பணக்காரர்கள் மட்டுமே செல்லக்கூடியது என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மலை வாசஸ்தலங்களுக்கோ, வெளிநாடுகளுக்குச் செல்வது மட்டும்தான் தேனிலவு என புரிந்து வைத்திருப்பவர்களும் உள்ளனர்.
எந்தத் தொந்தரவும் இல்லாத, உறவினர்கள் இல்லாத - பாதுகாப்பான எந்த ஊருக்கும் தேனிலவு செல்லலாம். கணவன்-மனைவிக்கே உரிய உவப்பான நேரம் அப்போதுதான் கிடைக்கும்.

தேனிலவு செல்வதை சிலர் பேக்கேஜ் டூராக போவார்கள். ‘குறைந்த செலவில் நிறைய ஊர் செல்லலாமே’ என்ற நப்பாசையில் இப்படி செய்கிறார்கள். கோயில் தரிசனம் என்றால் அதிகாலை 5 மணிக்கே எழுப்பிவிட்டு விடுவார்கள் பேக்கேஜ் டூர் ஆட்கள். ஒரு நாளில் 3 ஊர்களுக்கு கூட்டிச் சென்றால், நேரம் முழுக்க பயணத்தில்தான் போகும். அதனால், ஒருபோதும் தேனிலவை பேக்கேஜ் டூராக மாற்றாதீர்கள்
சிலர்   ரொம்ப   நல்ல பிள்ளையாக   தேனிலவு செல்லும் போது குடும்பத்தினரையும் கூட்டிச்செல்வார்கள். இதுவும் தவறான அணுகுமுறையே. தம்பதிக்குள் தகுந்த நேரத்தை உருவாக்கி, பேசி, பழகி போதுமான அளவில் உடலுறவில் ஈடுபட வழிவகுப்பதே தேனிலவு. எனவே, அங்கு சென்றும் நேரத்தை வீணாக்காதீர்கள் !

- விஜய் மகேந்திரன்


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Honeymoon in need!
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...