×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாய மக்களின் வார்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக கடந்த 19ம் தேதி முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கஜா புயல் காரணமாக, 12 மாவட்டங்களில் 32,706 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், 30,100 ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள், 7,636 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம்.

மேலும், 4,747 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் 4000க்கும் அதிகமான ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டிருந்த காபி பயிர், பருத்தி, முந்திரி, பலா, மா மரங்கள் உள்ளிட்டவைகளை விவசாயிகள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிப்புடன் நிற்கின்றனர். எனவே தென்னை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாய் வழங்கவும், அவற்றை வெட்டி அகற்றிட 500 ரூபாய் மொத்தம் 1,100 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், கஜா புயலால் அதிகமான பாதிப்புகளை சந்தித்த தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புனர்வாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், அம்மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு அவர்கள் இழந்த தென்னைக்கன்று, வாழைக்கன்றுகளை அரசு தோட்டத்துறை மூலம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் தென்னை கன்று வாழை, மா மரங்கள், முந்திரி போன்றவற்றை பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தென்னை கன்றுகளை கர்நாடகாவிலிருந்து வரவழவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தென்னை கன்றுகளுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உரத்தை வேளாண் துறை மூலமாக தருவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தவற்கான தொகையை ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,government ,Ghaz , Gajah Storm, Farmers, Free, Coconut, Banana, Tamil Nadu Government
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...