×

வேலூர் அமிர்தி அருகே நாக நதியின் குறுக்கே பாலம் அமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

வேலூர்: வேலூர் அமிர்தி அருகே நாக நதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் அமிர்தி சிறு வன உயிரியல் பூங்காவில் மான், மயில், முள்ளம்பன்றி உட்பட ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வேலூரின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருபவர்கள் அமிர்திக்கும் செல்கின்றனர். இந்நிலையில், வேலூரில் இருந்து அமிர்திக்கு செல்பவர்கள் இரண்டு வழிகளில் செல்கின்றனர். கணியம்பாடி, பாலாத்துவண்ணான், கீழ்அரசம்பட்டு வழியாகவும், தொரப்பாடி, சித்தேரி, பென்னாத்தூர் சோழவரம், நஞ்சுகொண்டாபுரம் வழியாகவும் அமிர்தி செல்கின்றனர்

இதில் துத்திக்காடு கிராமத்துக்கும், நஞ்சுகொண்டாபுரம் கிராமத்துக்கும் இடையில் நாகநதி ஓடுகிறது. இதில் தண்ணீர் குறைவாக ஓடும் நேரங்களில் இருசக்கர வாகனங்களிலும், மினிவேன்கள், ஆட்டோக்கள் மூலமும் மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் நாகநதியில் வெள்ளம் அதிகரிக்கும் என்பதால் ஆற்றை கடந்து செல்வது அபாயகரமானது என்றும், அதுபோன்ற நேரங்களில், பாலாத்துவண்ணான், கீழ்அரசம்பட்டு வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மேலும் அமிர்தி சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் வேலூருக்கு வந்து செல்ல கணியம்பாடியை சுற்றி வர வேண்டியுள்ளது.

ஒரு சிலர் வாகனங்களில் ஆற்றை கடக்க முயன்று சிக்கி கொள்கின்றனர். நடந்து செல்பவர்கள் வெள்ளப்பெருக்கிலும் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், துத்திக்காடு, நஞ்சுகொண்டாபுரம் இடையே நாகநதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் அமிர்திக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று வனத்துறையினரும் கூறுகின்றனர்.  ஆனால், பாலம் அமைப்பதற்காக ஆய்வு மட்டுமே செய்யும் அதிகாரிகள் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridge ,river ,Naga ,Vellore Amirthi , Vellore, Bridge, Village People
× RELATED பைக் திருடும் மர்ம ஆசாமி வீடியோ வைரல் ஆரணியில் நள்ளிரவில்