கமாடிட்டி சந்தையில் 5,600 கோடிக்கு நிதி மோசடி 300 தரகர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் செபி தகவல்

மதுரை: பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி புகாரில் 300 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் செபி தெரிவித்துள்ளது. அவர்கள் குறித்த விவரம், மோசடி பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய செபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லை சேர்ந்த வக்கீல் பால்பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விவசாய விளைபொருட்கள் உள்ளிட்டவற்றை ெமாத்தமாக கொள்முதல் செய்து, பிறருக்கு விற்பனை செய்யும் (கமாடிட்டி மார்க்கெட்) தொழிலை ஒரு அமைப்பு சென்னையில் செய்து வந்தது.

இந்த அமைப்புக்கு நிதி மற்றும் பண பரிவர்த்தனை, பங்கு வர்த்தகம் உள்ளிட்டவை மேற்ெகாள்ள அனுமதி கிடையாது. ஆனால், இந்த நிறுவனம் விதிகளை மீறி சட்டவிரோதமாக நிதி மற்றும் பண பரிவர்த்தனைகளை செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செபியிடம் பலரும் புகார் அளித்துள்ளனர்.  விசாரணையில், சுமார் 5,600 கோடி வரை மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் பல தரகர்களுக்கு தொடர்பு உள்ளது. எனவே, தரகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் புகார் குறித்து செபி 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செபி தரப்பில், 300 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்ட 300 தரகர்களின் விபரம், அவர்களது பங்கு, அவர்களது மீதான நடவடிக்கை உள்ளிட்ட விபரங்களை சீலிடப்பட்ட கவரில், செபி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த மாதம் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>