சும்மா பேசிக்கிட்டிருந்தேன் மாமா... வெடிகுண்டு பற்றி பேசியவர் விமானத்திலிருந்து இறக்கம்: போலீசார் விசாரணை

கொல்கத்தா: ெவடிகுண்டு குறித்து செல்போனில் பேசிய நபர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்வதற்காக ஜெட் ஏர்வேஸ் விமானம் தயாராக இருந்தது. அப்ேபாது வாலிபர் ஒருவர் வெடிகுண்டு குறித்து ெசல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். வாலிபரின் பேச்சால் அச்சம் அடைந்த சக பயணிகள் இது தொடர்பாக விமான ஊழியரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விமானியிடம் தகவல் தெரிவித்தனர்.

 இதனையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்துக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதன்பின்னர் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் சம்பந்தப்பட்ட விமானத்துக்கு விரைந்தனர். அவர்கள் செல்போனில் பேசிய வாலிபரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விமான நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் யோக்வேதாந்தா போதர் என்பது ெதரியவந்தது. மேலும் அவர் மும்பையில் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக செல்வதாகவும் கூறியுள்ளார். செல்போனில் வெடிகுண்டு குறித்து பேச்சுகள் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>