×

ஆப்கனில் தலிபான் தாக்குதல் 22 போலீசார் பலி

ஹீரத்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானின் பரா நகரில் இருந்து ஜூவைன் மாவட்டத்தை நோக்கி 4 வாகனங்களில் போலீசார் நேற்று முன்தினம் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது  பரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் தீவிரவாத அமைப்பு, 4 போலீஸ் வாகனங்கள்  தகர்க்கப்பட்டதாகவும் 25 போலீசார் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.  

ஆனால், இந்த தாக்குதலில் உயர் அதிகாரி ஒருவர் உட்பட 5 போலீசார் பலியானதாக மாகாண போலீஸ் செய்தித் தொடர்பாளர் மோஹிப் கூறி உள்ளார். ஆனால்,  குறைந்தபட்சம் 22 போலீசார் பலியாகி இருப்பதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு படையினரின் பலி எண்ணிக்கையை ஆப்கன் அரசு  தொடர்ந்து குறைவாக காட்டி வருவதாக கூறப்படுகிறது. 2015க்குப் பிறகு தற்போது வரை தீவிரவாத தாக்குதலில் 30,000 ஆப்கன் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Afghan ,Taliban ,attack , Taliban ,attack, Afghanistan, killed
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...