×

டிஒய்எப்ஐ நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கட்சியிலிருந்து சஸ்பென்ட்

திருவனந்தபுரம்: டிஒய்எப்ஐ நிர்வாகிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ெசாரணூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் பி.கே.சசி. இவர் அம்மாவட்டத்தில் கட்சியின்  செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில், டிஒய்எப்ஐ பாலக்காடு மாவட்ட கமிட்டி உறுப்பினரான ஒரு இளம்பெண், தன்னை எம்எல்ஏ சசி பாலியல்  தொந்தரவு செய்ததாக கட்சி தலைமைக்கு புகார் செய்தார்.

கடந்த 2 மாதத்திற்கு முன் இந்த விவரம் வெளியே கசிந்து கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய  வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் கட்சியில் புகார் செய்திருப்பதால் கட்சி சார்பில் கமிட்டி அமைத்து விசாரிக்கப்படும் என்று  மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் கூறினார்.இதையடுத்து விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை நடத்தி கட்சி தலைமையிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த  அறிக்கையில், சசி அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றும், போனில் ஆபாசமாக பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் மீது  தேவைப்பட்டால் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சசி 6 மாதத்திற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனிைடயே எம்எல்ஏ சசி குற்றம்  செய்ததாக கட்சி அமைத்த விசாரணை கமிட்டி அறிக்கை மூலம் தெரியவந்ததால் போலீஸ் அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று கேரள  எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா வலியுறுத்தி உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : executive ,DYFI ,Kerala Marxist MLA , Sexual harassment,DYFI, Kerala, Marxist MLA
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்