×

பார்முலா 1 கார் பந்தயம் அபு தாபி கிராண்ட் பிரீயில் லூயிஸ் ஹாமில்டன் அபாரம்

அபு தாபி: பார்முலா 1 கார் பந்தய தொடரில் நடப்பு சீசனின் கடைசி போட்டியாக நடந்த அபு தாபி கிராண்ட் பிரீயில் முதலிடம் பிடித்த மெர்சிடிஸ் வீரர் லூயிஸ்  ஹாமில்டன், மொத்தம் 408 புள்ளிகளுடன் உலக சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக கைப்பற்றினார்.அபு தாபி கிராண்ட் பிரீ பந்தயத்தில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன், மொத்தம் 55 சுற்றுகளை 1 மணி, 39 நிமிடம், 40.382 விநாடியில் கடந்து முதலிடம்  பிடித்தார். அவருக்கு முழுமையக 25 புள்ளிகள் கிடைத்தன. பெராரி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (+2.581 விநாடி), ரெட் புல் ரேசிங் வீரர் வெஸ்டாப்பன் (+12.706  விநாடி) அடுத்த இடங்களைப் பிடித்தனர்.

இந்த போட்டியுடன் 2018ம் ஆண்டுக்கான பார்முலா 1 சீசன் முடிவுக்கு வந்தது. மொத்தம் 21 பந்தயங்கள் நடைபெற்ற நிலையில் ஹாமில்டன்  (408 புள்ளி)  முதலிடம் பிடித்து உலக சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக கைப்பற்றி அசத்தினார். இவர் மெக்சிகோ கிராண்ட் பிரீ முடிவிலேயே உலக சாம்பியன் பட்டம்  வெல்வதை உறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. வெட்டல் (320), ரெய்கோனன் (251) ஆகியோர் அடுத்த 2 இடங்களை பிடித்தனர்.அர்ஜென்டினாவின் ஜுவன் மேனுவல்  பாங்கியோவின் சாதனையை (5 முறை உலக சாம்பியன் பட்டம்) ஹாமில்டன் சமன்  செய்துள்ளார். இந்த வரிசையில்  ஜெர்மனியின் மைகேல் ஷூமேக்கர் அதிகபட்சமாக 7  முறை உலக சாம்பியன் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார். பாங்கியோ,  ஹாமில்டன் தலா 5 முறை  வென்று 2வது இடம் வகிக்கின்றனர். பிரான்ஸ் வீரர்  அலெய்ன் பிராஸ்ட், ஜெர்மனியின் வெட்டல் தலா 4 முறை உலக  சாம்பியன் பட்டம் வென்று 3வது  இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Formula 1 ,Louis Hamilton ,Abu Dhabi Grand Prix , Formula 1, car race, Louise Hamilton, remembered , Abu Dhabi Grand Prize
× RELATED சிங்கப்பூர் பார்முலா 1 செய்ன்ஸ் சாம்பியன்