×

மார்த்தாண்டம் சாலை சமன்படுத்தும் பணி: நள்ளிரவு செம்மண் கடத்தல் ஜரூர்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், ரூ.142 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக, சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு முற்றிலும் புதிய ெதாழில் நுட்பத்துடன் இந்த பாலம் அமைந்துள்ளது.இந்த நிலையில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் மேம்பால பில்லர்கள் உயரம் குறைவு. இங்கு உயரம் அதிகரித்தால் மேம்பாலத்தில் இருந்து காந்தி மைதானம் இறங்கும் சாய்வு அதிக தூரத்துக்கு சென்றுவிடும். ஆனால் பில்லர்கள் உயரம் குறைவால் தேசிய நெடுஞ்சாலையின் கீழ்ப்பகுதி வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

பொது வாக கன்டெய்னர்கள் செல்ல 5.5 அடி உயரம் இருக்க வேண்டும். எனவே பில்லர்கள் உயரம் குறைந்த பகுதியில் 6 அடி வரை ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி சமன்படுத்தி வருகின்றனர். இதனால் கனரக வாகனங்களும் எளிதாக தங்கு தடையின்றி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சேகரிக்கப்படும் மண் நல்ல தரமான செம்மண்ணாக உள்ளது. இந்த மண்ணை தனியிடத்தில் கொட்டி பின்னர் தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த மண்ணை கடத்தி காசு பார்த்து வருகின்றனர் சிலர். இதற்காக ‘நெடுஞ்சாலை பணி’ என லாரிகளில் ஸ்டிக்கர் ஒட்டி இரவு நள்ளிரவு நேரங்களில் கடத்தி வருகின்றனர். இப்படி கடத்தப்படும் செம்மண் செங்கல் சூளைகளுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டம் போலீசார், இதே போல மண் கடத்திய 2 வாகனங்களை மடக்கி பிடித்துள்ளனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மண் கடத்தலை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marthandam , Marthandam, road balancing work, midnight, semen trafficking, jaroor
× RELATED மார்த்தாண்டம் அருகே பைக் திருட்டு