×

ஆன்லைன் செக் இன் முறைக்கு இனி கட்டணம் வசூல் : இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் அறிவிப்பு

டெல்லி : விமான சேவையில் வருவாயை அதிகரிக்க இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி இண்டிகோ நிறுவனத்தின் விமான டிக்கெட்களை இணையதளத்தில் புக் செய்யும் போது இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகளின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின் அனுமதிப்பது வழக்கமான நடைமுறையாகும். விமான நிலையத்தில் நேரம் வீணாகுவதை தடுக்கவும் எளிமையாகவும் இருப்பதால் இணையதளம் வாயிலாகவே  செக் இன் முறை தற்போது கையாளப்படுகிறது.

இதற்கு இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இண்டிகோ,ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் அறிவித்திருப்பது விமான பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாகவே புக் செய்யும் போது இருக்கைக்கு 200 முதல் 1000 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் விமான பயனாளிகள் தங்களது ஆதங்கங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தின. இதனடியடுத்து ஆன்லைன் செக் இன் முறைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airlines ,SpiceJet , No charge for online checks: Indigo, SpiceJet airlines announce
× RELATED பயணிகள் குறைவு: 2 இலங்கை விமானங்கள் ரத்து